EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் - DEE செயல்முறைகள்!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6. ந.க.எண்.009350 / ஜெ2 / 2024, நாள்: 09.05.2024
பொருள்:
தொடக்கக் கல்வி - கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) இணையதளம் பள்ளியில் கல்வி கல்வி பயிலும் மாணவர்களை தொடர்பு கொள்வதற்கான பெற்றோர் / பாதுகாவலர் அலைபேசி எண் - சரிபார்த்தல் - தவறான எண்களை நீக்கம் செய்து புதிய எண்களை உள்ளீடு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக பார்வை: மதிப்புமிகு பள்ளிக் கல்வி செயலர் அவர்களின் அறிவுரைகள் பள்ளிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் நேரடி தரவுகளாக கையாளப்பட்டு வருகின்றன. இவ்விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு முன்னெடுப்புகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பள்ளியிலும் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் அலைபேசி எண்கள், சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் / ஆசிரியர்கள் மூலம் பெறப்பட்டு அப்பள்ளியின் உள்நுழைவு வாயிலாக கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு பெறப்பட்டுள்ள பெற்றோர் / பாதுகாவலரின் அலைபேசி எண்கள் தற்போதைய நிலையில் பயன்பாட்டில் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும். அதற்காக தற்போது ஒரு புதிய வசதி கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. https://youtu.be/29vi0NgzptE?si=wkt h60kZmCV-L2D என்ற லிங்க்கில் இது தொடர்பான விளக்கமான காணொலி காட்சியும் இடம் பெற்றுள்ளது. பெற்றோர் ! பாதுகாவலரின் (1) தற்போதைய அலைபேசி எண் பயன்பாட்டில் சரியாக இயங்குகின்றதா என்பதையும், இயங்குகின்றது எனில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP) கொண்டு புதுப்பிக்கவும் (2) பெற்றோர் தங்களின் அலைபேசி எண்களை மாற்றி இருந்தால் பழைய எண்ணை நீக்கம் செய்துவிட்டு புதிய எண்ணை பதிவிடவும் அதனை ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP) கொண்டு மேம்படுத்தவும் வேண்டும்.
மேற்படி, கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் மாணவர்களின் பெற்றோர் / பாதுகாவலரின் அலைபேசி எண் விவரங்களை புதுப்பித்து பதிவிட தேவையான அறிவுரைகளை தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் / ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) இப்பணியில் சுணக்கம் ஏதுமின்றி சிறப்பு கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கலாகிறது. DEE - Parent Mobile Number Updation Proceedings👇
CLICK HERE TO DOWNLOAD PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.