1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் - கால அட்டவணையில் மாற்றம் . அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 3, 2024

1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் - கால அட்டவணையில் மாற்றம் . அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக CEO Proceedings

1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் - கால அட்டவணையில் மாற்றம் . அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக CEO Proceedings School Final Examinations for Classes 1 to 9 - Change in Time Table . Giving instructions - on behalf of the CEO Proceedings

மதுரை மாவட்டத்தில் மட்டும் 23ந் தேதி நடைபெறும் தேர்வு 24ந்தேதிக்கு மாற்றம்...

பள்ளிக்கல்வி - 2023 - 2024 ஆம் கல்வியாண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் - கால அட்டவணையில் மாற்றம் . அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பார்வையில் காணும் சென்னை, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகளின்படி, 2023. 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் 9 வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்துவது சார்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை (1) யில் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 2204.2024 ஆம் தேதிக்கும் 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024 ஆம் தேதிக்கும் நடைபெறும் என இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

தற்போது மதுரை மாவட்டத்தில் 23.04.2024 அன்று சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இயக்குநரின் அனுமதி பெற்று 23.04.2024 நடைபெறும் சமூக அறிவியல் தேர்வானது 24.04.2024 அன்று நடைபெறும் என அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.