கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) திருத்திய சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 5, 2024

கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) திருத்திய சுற்றறிக்கை

கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அவர்களின் திருத்திய சுற்றறிக்கை அறிவிப்பு...

மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி).அறந்தாங்கி திருத்திய சுற்றறிக்கை

-05.04.2024

அறந்தாங்கி கல்வி மாவட்டம்(தொடக்கக் கல்வி) அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 5-ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. ஆதலால் அவ்வகுப்பு மாணவர்களுக்கு 6-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12-ஆம்தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக 12-ஆம் தேதிவரை 4 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து அவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் பணியினை ஆசியர்கள் மேற்கொள்ளலாம். அதன் பிறகு தேர்தல் பணிகள் ஆசிரியர்களுக்கு 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதிவரை உள்ள காரணத்தினால் 4 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மீண்டும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தேர்வுகள் எழுதுவதற்காக பங்கேற்க கூடிய வகையில் தெளிவாக எடுத்து சொல்லுதல் வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ஆசிரியர்களை பொருத்தவரை 26 ஆம் தேதிவரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுகிறது. அவர்கள் இடையில் தேர்தல் பணிக்காக செல்கின்றபோது அதை On Duty ஆக கருதலாம். தேர்தல் பணி இல்லாத நேரங்களில் பள்ளிக்கு வருகைபுரிந்து ஏற்கனவே நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களை திருத்துகின்ற பணி மாணவர்களுக்கான promotion கொடுக்கின்ற பணி . promotion registration ல் பதிவு செய்கின்ற பணி, வட்டார கல்வி அலுவலருக்கு அனுப்புகின்ற பணி ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். பள்ளித் தலைமை ஆசிரியர்களை பொருத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இணையதள இணைப்பு வசதி (ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகம்) அமைக்க வரும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.