கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 5, 2024

கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்



Procedures of Thanjavur District Education Officer (Elementary Education) regarding grant of summer vacation கோடை விடுமுறை அளித்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) தஞ்சாவூர் சுற்றறிக்கை

தஞ்சாவூர் கல்வி மாவட்டம் (தொடக்கக்கல்வி ) அனைத்து ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 5 ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. ஆதலால் அவ்வகுப்பு மாணவர்களுக்கு6 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணி நிமிர்த்தம் காரணமாக அம்மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது இம்மாணவர்களுக்கு மீண்டும் 22.04,2024 அன்று அறிவியல் மற்றும் 23.04,2024 அன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் இவ்வகுப்பு மாணவர்களுக்கு 24.04,2024 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் அனைவரும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர் சேர்க்கை,விடைத்தாள் மதிப்பீடு செய்தல் மற்றும் பிற பணிகள் (smart class and hi tech lab ) அமைக்க வரும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிட அனைத்து தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிடுமாறு அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

5-4-24 மாவட்டக்கல்வி அலுவலர்,

(தொடக்கக்ல்வி ) தஞ்சாவூர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.