மே 5ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பப்பதிவு துவக்கம் Engineering application registration starts from 5th May
மே 6ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5 முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது.
இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பி.இ., பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே 5ம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூலை 2வது வாரம் வரை அவகாசம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.
மேலும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க வாய்ப்புள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.