IFHRMS - பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 2, 2024

IFHRMS - பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு!

பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கனிவான கவனத்திற்கு

2024-2025 நிதியாண்டில் இருந்து களஞ்சியம் (IFHRMS Ver.2.0) மென்பொருளில் தாமாகவே வருமானவரி கணக்கீடு செய்து பிடித்தம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மாற்றம் மார்ச்2024 ஊதியபட்டியலில் இருந்து நடைமுறைபடுத்தப்படும்.

1) பழைய வருமானவரி திட்டத்தில் தொடர விரும்பும் பணியாளர்கள் / ஆசிரியர்கள் / அலுவலர்கள் 10.03.2024க்கு முன்னர் தங்களின் வரித்தளர்வு தொடர்பான சேமிப்பு விவரங்களை களஞ்சியம் மென்பொருளில் அவரவர்களே பின்வருமாறு பதிவேற்றம் செய்யலாம். 2) Employee Login - eServices - Self Services Others Income Tax Declaration - Home Rent Home building Deduction under chapter VIA - Other Income शुकी Calculation Select 2 नं खú Income Tax . Review & Submit & Review & தரவுகளை சரிபார்த்து பின்னர் Submit கொடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

(அல்லது )

3) களஞ்சியம் மென்பொருளில் பணம் பெற்று வழங்கும் அலுவலர் பட்டியல் தயார் செய்யும் முதுநிலை அலுவலர் (இளநிலை உதவியாளர் / உதவியளர்) நிலையில் இவ்விபரங்களை பதிவேற்றம் செய்யலாம். 4) பழைய முறையில் வருமானவரி கணக்கீடு செய்ய Income Tax Declaration அளிக்காத பட்சத்தில் தானாகவே புதிய வருமானவரி திட்டத்தின் கீழ் (NEW REGIME) வருமானவரி கணக்கீடு செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கலாகிறது.

5) 2024-2025 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கீடு செய்யப்பட்டு மார்ச் 2024-க்கான ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்பதால் அனைத்து பணம் பெறும் அலுவலர்களும் இது குறித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.