பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 13, 2024

பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!!



School Education - Dir Transfer Order - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிடமாறுதல் ஆணை வெளியீடு. School Education - Dir Transfer Order - Director and related posts - Issuance of transfer order.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிடமாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது. பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இரண்டு உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 193ல் "தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி பணியில் வகுப்பு-1ஐ சார்ந்த இயக்குனர் மற்றும் அதனை எத்த பணியிடங்களில் பணிபுரிந்த அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி தனியார் பள்ளிகள் இயக்ககம் இயக்குநர் முனைவர் நாகராஜ முருகன் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக இருந்த முனைவர் பழனிசாமி தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

CLICK HERE TO DOWNLOAD பணியிடமாறுதல் ஆணை வெளியீடு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.