முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 ( தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்...) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 21, 2024

முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 ( தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்...)

முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 ( தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்...) First Election Training Class 23.03.2024 (Tuticorin District Education Officer...)

நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தல் 2024 - தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கான நியமன ஆணையானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது ,

எனவே தங்கள் பள்ளி சார்பான தேர்தல் பணி ஆணையினை நாளை காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ( இடைநிலை ) தனிநபர் மூலம் நேரில் வந்து பெற்றுச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை 22.03.2024 மாலை 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது .

முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 அன்று நடைபெறவுள்ளதால் அவசரம் கருதி உடன் நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலகம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.