தமிழக பட்ஜெட்டில் ‘கருணையும் நிதியும்’ இல்லை: ஜாக்டோ-ஜியோ நிர்வாகி கருத்து Tamil Nadu budget lacks 'compassion and finance': Jacto-Jio executive
மதுரை: ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளருளான க.நீதிராஜா கூறியதாவது:
திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம், விடுப்பு ஒப்படைத்து பணம் பெறுதல், சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவி யாளர்கள், எம்ஆர்பி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம், சாலைப் பணியாளர் களின் 41 மாத பணிநீக்க காலத்தை வரன்முறை, அரசு அலுவலகங் களில் உள்ள 6 லட்சத்துக்கும் மேலான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தனர். இக்கோரிக்கைகளை சிறி தளவுகூட பரிசீலிக்காத நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.
எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ‘கரு ணையும் நிதியும்’ இல்லாத நிதிநிலை அறிக்கையாக பார்க்கப் படுகிறது. இருப்பினும், தற்போது நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தமிழக முதல் வர் எங்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.