இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக - தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 28, 2024

இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக - தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள்



இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - இடைநிலை ஆசிரியர் பணியிடம் 01.01.2024 நிலவரப்படி 31.12.1997 வரை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், சென்னை-6 15.6.στ. στ.003366/q1/2024, बी. 27.02.2024

பொருள்

: தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - இடைநிலை ஆசிரியர் பணியிடம் 01.01.2024 βίουوش 31.12.1997 வரை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக.

பார்வை

1. அரசாணை (நிலை) எண்.12 பள்ளிக் கல்வி (क्र.61(1)) . .30.01.2020

2. அரசாணை (நிலை) எண்.243 பள்ளிக் கல்வி (EE1) लाबी. 21.12.2023

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணியில் வகுப்பு III வகை 2-ல் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உள்ளது. 01.01.2024 நிலவரப்படி 31.12.1997 வரை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. இவ்வுத்தேச மாநில முன்னுரிமைப்பட்டியலில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர் மூலமாக சார்பு செய்யுமாறு அனைத்து மாவட்டக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

இவ்வுத்தேச மாநில முன்னுரிமைப் பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பெயர், பிறந்த தேதி, இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள் (முற்பகல்/பிற்பகல்) பணியாற்றும் தொடக்கக் கல்வி மாவட்டம், ஒன்றியம், பள்ளியின் பெயர். இடைநிலை ஆசிரியருக்கான EMIS ID, மற்றும் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் பள்ளியின் UDISE CODE ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இப்பட்டியலில் மேற்கண்ட விவரங்களில் ஏதேனும் திருத்தம், சேர்க்கை, நீக்கம் ஆகியவை இருப்பின் சார்ந்த இடைநிலை ஆசிரியரிடமிருந்து உரிய விவரங்களை பெற்று உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்படும் திருத்தம், சேர்க்கை. நீக்கம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உரிய திருத்தம் செய்து இடைநிலை ஆசிரியர்களின் இறுதி மாநில முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு 01.01.2024 நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்களின் உத்தேச மாநில முன்னுரிமைப்பட்டியல், தொடக்கக் கல்வி இணை இயக்குநர் (நிர்வாகம்)

பெறுநர்

1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி)

2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்.

நகல்:

அரசு செயலாளர். பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-9. தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.