14.03.2024ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும்
மார்ச் 14ம் தேதி உள்ளூர் விடுமுறைை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 14th March Local Holiday - Notification by District Collector
விழுப்புரம்: மார்ச் 14 உள்ளூர் விடுமுறை
மேல்மலையனூர் கோயில் விழாவை முன்னிட்டு மார்ச் 14ம்தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 23ம் தேதியை பணி நாளாக அறிவித்தார் ஆட்சியர் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதி அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவுலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும்.
மார்ச் 14ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மார்ச் 23ஆம் தேதி அன்று இதனை ஈடு செய்யும் விதமாக பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.