மதிய உணவுத் திட்டம்: செலவினத் தொகையினை உயர்த்தி முதல்வர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 31, 2024

மதிய உணவுத் திட்டம்: செலவினத் தொகையினை உயர்த்தி முதல்வர் உத்தரவு!



மதிய உணவுத் திட்டம்: செலவினத் தொகையினை உயர்த்தி முதல்வர் உத்தரவு! Mid-Day Meal Program: Chief Minister's order to increase the amount of expenditure!

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ. 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருள்களுக்கான செலவினம் ரூ. 0.46 எனவும், எரிபொருளுக்கான செலவினம் ரூ.0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவூட்டுச் செலவினம் தற்போது வழங்கப்பட்டு வருவது மற்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் கண்டுள்ளவாறு:

இவ்வாறு, உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.41.14 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களிலுள்ள சத்துணவுத் திட்ட பயனாளிகளான சுமார் 11.50 இலட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.