08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள் 08.01.2024-to-10.01.2024-School-Cleanliness-Activities - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 7, 2024

08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள் 08.01.2024-to-10.01.2024-School-Cleanliness-Activities



08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600006 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி"- சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகளில் பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கருத்தாளர்களின் பங்கேற்பு - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.

பார்வை:

. 1. ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் இணைச் យល់ फुलको क्र. क. बाल्ला. 1680 / All / फल / मक / 2023, लाक्षा: 22.12.2023

2. பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச்செயல்முறைகள் ந.க.எண். 079119/எம்/இ 1/2023, நாள். 02.11.2023

பார்வை !- யில் கண்டுள்ள செயல்முறைகளின்படி 2024 ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சென்ற 05.01.2024, வெள்ளிக் கிழமையன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" - சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகளில் 2024, ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும், முடிவுசெய்யப்பட்டது.

பெற்றோர்களைப் பெருமளவில் இம்முன்னெடுப்பில் பங்கேற்க செய்யவும் தலைமையாசிரியர்கள் வழியாகக் திட்டமிடப்பட்டுள்ளது.

பார்வை 2-யில் கண்டுள்ள செயல்முறைகளின்படி 2024, ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் செயல்பாடுகளை நடத்துவது குறித்தான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்காண் செயல்பாடுகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களின் பங்கும் பொறுப்பும் குறித்த வழிகாட்டுதல்கள் கீழகண்டவாறு வழங்கப்படுகிறது.

அ) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

2024. ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பள்ளிகளில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுவினர் பங்கேற்பது என்பது மிகவும் முக்கியமானதாகும்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி வாளாகத்தில் தூய்மை செய்ய வேண்டிய வற்றை பட்டியலிட்டு, அந்த செயல்பாடுகளை ஒருகிணைக்குமாறும், உள்ளாட்சியின் பங்கேற்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உறுப்பினர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இந்த நிகழ்வின் அவசியத்தை எடுத்துக்கூறி அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளி அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து இந்த செயல்பாட்டில் ஈடுப்படுத்த வேண்டும்.

நம் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளியை சுத்தமாக வைத்துக்கொள்வது பெற்றோராகிய நமது அனைவரது கடமையாக எடுத்துக் கொண்டு இந்த செயல்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஆ) பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்:

பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள 350 கருத்தாளர்கள் தாங்கள் பணிபுரியும் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் நடைபெற இருக்கும் சிறப்பு பள்ளி தூய்மை பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 100 பள்ளிகளை சேர்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கும் 08.01.2024 (फुक्रល់ 10.01.2024 ល Que सोनी आर्यल செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கருத்தாளர்கள் வாட்ஸ் ஆப் குழு மற்றும் தொலைபேசி வாயிலாக பள்ளி தூய்மை செயல்பாடு நடைபெற இருப்பது குறித்தும் அதில் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்தும் எடுத்துக் கூற வேண்டும்.

. பள்ளி அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் ஒருங்கிணைத்து இந்த செயல்பாட்டில் ஈடுப்படுத்த வேண்டும்.

. பள்ளி தூய்மை பணிகள் நடைபெறும் மூன்று நாட்களிலும், கருத்தாளர்கள் தங்களையும் இந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்தி உறுப்பினர்களுக்கு உற்சாகமூட்ட வேண்டும்.

பள்ளி நலன் சார்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு தூய்மை பணிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கருத்தாளர்களை ஒருங்கிணைத்து சிறந்த நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து அனைத்து அரசு பள்ளிகளையும் தூய்மையான மிளிரும் பள்ளிகளாக உருவாக்கிட அனைத்து தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.