Ennum Ezhuthum - When is the 3rd term training for teachers? — Proceedings - Ennum Ezhuthum - ஆசிரியர்களுக்கு 3-ஆம் பருவ பயிற்சி எப்போது? - Proceedings
எண்ணும் எழுத்தும் பயிற்சி சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான வட்டார அளவிலானபயிற்சி நடைபெறுதல் LCD Projector, Speaker, Mic பெற்று வழங்கக் கோருதல்-சார்பாக.
பார்வை .
சென்னை-6, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் நக.எண். 2411/எஃப்2/2021, நாள்.16.11.2023.
பார்வையில் காணும் செயல்முறைத் தகவலின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூன்றாம் பருவத்திற்கான வட்டார அளவிலான பயிற்சியானது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் இணைப்பில் காணும் பயிற்சி மையங்களுக்கு LCD, Projector, Speaker, Mic ஆகியவற்றை வட்டார வளமையத்திலிருந்தோ அல்லது உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலிருந்தோ பெற்று சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இணைப்பு.
பயிற்சி நடைபெறும் மையம் விபரம்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.