Teacher's Alliance demand immediate filling of high school headmaster posts based on court order நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
சென்னை உயர்நீதிமன்றம் ( பெஞ்ச் ) மற்றும் டெல்லி உச்சநீதிமன்றம் ஆகியவைகள் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் கூட்டணி கோரிக்கை... : சென்னை உயர்நீதிமன்றம் (பெஞ்ச்) மற்றும் டெல்லி உச்சநீதிமன்றம் ஆகியவைகள் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் - சார்ந்து.
உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்று வேறு ஒரு பணித் தொகுப்பிற்கு சென்றுவிட்டவர்களை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் என்ற போர்வையில் அவர்களை மீண்டும் பழைய பணித் தொகுப்பிற்கு கொண்டு வருவதற்கு விதிகளில் இடமில்லை என்றும், அவ்வாறு செய்வது விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது என்றும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முழுக்க, முழுக்க பணியில் இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டே நிரப்பப்படவேண்டும் என்றும், மேற்கூறிய உயர் நீதிமன்ற பெஞ்சு மிகத் தெளிவான, முத்தாய்ப்பான தீர்ப்புக்களை வழங்கியுள்ளது.
அத்தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், அத்தீர்ப்பை இரத்து செய்யக் கோரியும் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்க முடியாது என்று கூறி மேல்முறையீட்டு மனுவையே தள்ளுபடி செய்துவிட்டது என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் விரைந்து செயலாற்றி, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களையே, பணிமூப்பு அடிப்படையில், உயர்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமித்து நீதியை நிலைநாட்டிட உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.
மேற்கூறிய நீதிமன்றத் தீர்ப்புகளில் இருந்து அணு அளவும் விலகிச் செல்லாமல், அப்படியே முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் என்றும் தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.