உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான வணிகவியல் / கணக்கு பதிவியல், ஆங்கிலம், பொருளியல், வரலாறு மற்றும் தமிழ் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி (28.11.2023& 30.11.2023) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 26, 2023

உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான வணிகவியல் / கணக்கு பதிவியல், ஆங்கிலம், பொருளியல், வரலாறு மற்றும் தமிழ் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி (28.11.2023& 30.11.2023)

தூத்துக்குடி மாவட்டம், வானரமுட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் - முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி - உயர் மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான வணிகவியல் / கணக்கு பதிவியல், ஆங்கிலம், பொருளியல், வரலாறு மற்றும் தமிழ் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி 28.11.2023& 30.11.2023 ) வழங்குதல் கருத்தாளர்கள் மற்றும் ஆசிரியர்களை பணிவிடுவிக்க கோருதல்- சார்பு - Training of teachers teaching Commerce/Accounting, English, Economics, History and Tamil subjects for higher and higher secondary classes in districts. ( 28.11.2023 & 30.11.2023 )

பார்வை:

சென்னை 06, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன Cw&झी मफलक 15.5.στ στ: 64061 Ú4/2023 बी. 26.10.2023.

மேற்காண் பொருள் சார்பாக, பார்வையில் காண் செயல்முறைகளின்படி, 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கு மாணவர் மைய கற்றல் அனுபவங்களை வழங்கும் விதமாக திறன்வளர்ப் பயிற்சியினை நடத்திட மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பொருட்டு, மேல்நிலை வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கான (11 மற்றும் 12ஆம் வகுப்பு வரை) இரண்டாம் கட்ட பயிற்சி, வணிகவியல் / கணக்கு பதிவியல், ஆங்கிலம், பொருளியல், வரலாறு மற்றும் தமிழ் பாடங்களைக் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கிடும் வகையில் கீழ்க்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது எனவே, கீழ்க்கண்ட ஆசிரியர்களை பயிற்சியின் கருத்தாளர்களாக செயல்படும் வகையில் பணிவிடுவிப்பு செய்யவும், மேற்காண் பாடம் சார்ந்த அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும் உரிய நாள் / நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள செய்ய ஏதுவாக பணிவிடுவிப்பு செய்யுமாறும் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.