மாவட்டக் கல்வி அலுவலகங்கள் - நிருவாக மறுசீரமைப்பு - மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் ஆண்டாய்வு மேற்கொள்ளல் - அறிக்கை கோருதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வித்துறை - நிருவாக மறுசீரமைப்பு - அரசாணை ( நிலை ) எண் . 151. பள்ளிக் கல்வித்துறை . நாள் : 09.09.2022 ன் படி 01.10.2022 முதல் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் - நிருவாக மறுசீரமைப்பு - மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் ஆண்டாய்வு மேற்கொள்ளல் - அறிக்கை கோருதல் - சார்பு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்..
பள்ளிக் கல்வித்துறையில், பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குதல் மற்றும் பள்ளிகளை திறம்பட கண்காணிப்பதை உறுதி செய்யும் வகையில் கள அளவில் நிருவாகத்தை மறு சீரமைப்பு செய்து, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இருந்த 120 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி). மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், புதிதாக 32 மாவட்டக் கல்வி அலுவலகங்களை ஏற்படுத்தியும் பார்வை 2 மற்றும் 3ல் கண்டுள்ளவாறு அரசளவில் ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகள், மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) நிர்வாகத்தின் கீழும் அனைத்து சுயநிதி/மெட்ரிக் பள்ளிகள் / மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் )நிருவாகத்தின் கீழும். அரசு / நகராட்சி / அரசு நிதயுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) நிருவாகத்தின் கீழ் செயல்படத் தக்க வகையில் நிருவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு 01.10.2022 முதல் இயங்கி வருகிறது. மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) - தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழும், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் ) - இயக்குநர் (தனியார் பள்ளிகள்) கட்டுப்பாட்டின் கீழும்.
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) - பள்ளிக் கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகிறது. பார்வை 3ல் காணும் அரசாணையின்படி, பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ்வரும். மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ஆண்டாய்வு மேற்கொள்ளும் அதிகாரம் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வகையில், தத்தமது நிருவாக எல்லையின் கீழ்வரும் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்களை தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், பார்வை 3 மற்றும் 4ல் கண்டுள்ள அரசாணைகளின்படி நிருவாக மறு சீரமைப்பு 01.10.2022 மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த ஓராண்டு காலத்தில், பள்ளிகளில் கற்றல் / கற்பித்தல் முதல் செயல்முறைகளை கண்காணிப்பதில் மாவட்டக் கல்வி அலுவலர்களின் செயல்திறன், பள்ளி மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்களை முழுமையான அளவில் செயல்படுத்தியமை குறித்தும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பார்வை 3ல் காணும் அரசாணையில் மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை) வகுத்துரைக்கப்பட்டுள்ள கடமை மற்றும் பொறுப்புகள், அதிகாரங்களை செயல்படுத்துவதில் மாவட்டக் கல்வி அலுவலரின் முன்னெடுப்பு. ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்களின் குறைதீர் நடவடிக்கைகள், அலுவலக பொது நிர்வாகம் உள்ளிட்டு வழக்கமாக ஆண்டாய்வில் ஆய்வு செய்யப்படும் அனைத்து செயல்பாடுகள் குறித்த ஆவணங்களையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறே. அம்மாவட்டக் கல்வி அலுவலரின் நிருவாக எல்லைக்குள் வரும் நீதிமன்ற வழக்குகளில் உரியவாறு எதிர்வாதவுரை தாக்கல் செய்தல்/ நீதிமன்ற ஆணைகளை நிறைவேற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முறையாகவும் உரிய காலக்கெடுவிற்குள்ளும் எடுக்கப்பட்டுள்ளதா? என்பதனை மிகவும் முக்கியத்துவம் அளித்து, ஆய்வு செய்ய வேண்டும் எனவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்காண் ஆண்டாய்வினை 30.11.2023க்குள் மேற்கொள்ளுமாறும், ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சார்பான அறிக்கையினை 15.12.2023க்குள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.