Applications are invited for the 23rd Postal / Part-time (subject to change) Diploma in Cooperative Management for the year 2023-2024. - 2023-2024 ஆம் ஆண்டு 23 வது அஞ்சல்வழி / பகுதிநேர (மாறுதலுக்கு உட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
செய்தி வெளியீடு எண் : 2271
நாள்: 14.11.2023
செய்தி வெளியீடு
2023-2024 ஆம் ஆண்டு 23 வதுஅஞ்சல்வழி / பகுதிநேர (மாறுதலுக்கு உட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-2024 ஆம் ஆண்டு 23 வது அஞ்சல் வழி / பகுதிநேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் துவங்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் உத்தேசமாக 10.11.2023 முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 100/-ஐ இணைய வழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று +2 தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி தொடர்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncuicm.com என்ற இணையதளத்தில் மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், அந்தந்த மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.