அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா-2023-24 - மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல் - குழு பொறுப்பாளர்கள், நடுவர்கள் மற்றும் அறை பொறுப்பாளர்கள் நியமனம் செய்தல் - சார்பு.
மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலரின் (ஒபக) செயல்முறைகள் பார்வையில் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி கல்வி சாரா செயல்பாடுகள் 2023-24ம் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் "கலைத்திருவிழா" போட்டிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் 27.11.2023 அன்று சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, சீர்காழியில்(SMH HSS, Sirkali) காலை 08.30 மணி முதல் நடைபெற உள்ளது.
போட்டிகளுக்கு குழு பொறுப்பாளர்களாகவும், நடுவர்களாகவும் மற்றும் அறை பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோரை போட்டிகளில் பங்குபெறுவதற்கு ஏதுவாக பணிவிடுவித்து அனுப்பிவைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்



ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.