சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் - Best School Award 2022_23 - Selected School List - All Districts - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 7, 2023

சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் - Best School Award 2022_23 - Selected School List - All Districts - Director Proceedings

சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் - Best School Award 2022_23 - Selected School List - All Districts - Director ProceedingsBest School Award 2022_23 - Selected School List - All Districts - Director Proceedings

2022_23 கல்வி ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Best School Award 2022_23 - Selected School List - All Districts - Director Proceedings மின்னஞ்சலில்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.032148/சி3/2022 நாள்.06.11.2023

பொருள்

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / ஊராட்சி / நகராட்சி/மாநகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2022 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்குதல் தொடர்பாக.

பார்வை 1 அரசாணை (நிலை) 6T600T.190, பள்ளிக் கல்வித்துறை, நாள்.04.06.1998.

2 அரசாணை (நிலை) எண்.137, பள்ளிக் கல்வித்துறை, நாள். 20.05.1999.

3 அரசாணை (நிலை) எண்.73 பள்ளிக் கல்வித் (எஸ்.2) துறை, நாள் 20.03.2008

4 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 032148 / சி3 நாள்.13.04.2023 மற்றும் 20.06.2023 / 2022,

5 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்.

6 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதம் ந.க.எண். 032148 / சி3 / 2022, நாள்.26.10.2023, பார்வை 4ல் காணும் இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின் படி அனைத்து மாவட்ட சிறந்த பள்ளிகளுக்கான தேர்வுக் குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான பெயர்ப்பட்டியல் பெறப்பட்டுள்ளது.

அதன்படி சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் ஆகிய மூவரும் 14.11.2023 அன்று சென்னை-85, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு காலை 9.30 மணியளவில் வருகை புரிய வேண்டும் எனவும், மாண்புமிகு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்கள் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்க இருப்பதால் தவறாது கலந்து கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,சார்ந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கியமைக்கான 'ஒப்புதல்' சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து நிலையான பதிவேட்டில் ஒப்பம் பெற்று வைக்கப்படவேண்டும் எனவும், மாநிலக்கணக்காயர் / துறைத் / துறைத் தணிக்கை அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளும் போது இப்பதிவேடு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தொடக்கக் கல்வி) தெரிவிக்கலாகிறது.

இணைப்பு: தேர்ந்தெடுக்கப்பட்டபள்ளிகளின் பெயர்ப்பட்டியல் CLICK HERE TO DOWNLOAD Director Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.