100க்கு 8 மார்க்: பள்ளி மாணவியை கண்டித்த ஆசிரியரை அடித்த பெற்றோர் - கண்டுகொள்ளாத கல்வித்துறை, ஆசிரியர் சங்கங்கள்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 24 نوفمبر 2023

100க்கு 8 மார்க்: பள்ளி மாணவியை கண்டித்த ஆசிரியரை அடித்த பெற்றோர் - கண்டுகொள்ளாத கல்வித்துறை, ஆசிரியர் சங்கங்கள்?



100க்கு 8 மார்க்: பள்ளி மாணவியை கண்டித்த ஆசிரியர் ஆசிரியருக்கு 3 முறை பளார் விட்ட மாணவியின் தந்தை

கண்டுகொள்ளாத கல்வித்துறை, ஆசிரியர் சங்கங்கள்?

திருப்பத்துார் அடுத்த விசமங்கலம் பனந்தோப்பு பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 575 மாணவர்கள் படித்து வருகின்றனர். 25 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ஆசிரியராக இருப்பவர் மகேஷ்வரன். 2 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் ஆங்கில விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது. அப்போது கோடியூரைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஒருவர் 100 மார்க் குக்கு 8 மார்க் மட்டும் எடுத்துள்ளார். இதனால் ஆசிரியர் மகேஷ்வரன், அந்த மாணவியிடம், ‘படிக்காமல் இருந்தால் வாழ்வில் எப்படி முன்னேறுவது?” என அறிவுரை வழங்கி 'லேசாக' கண்டித்துள்ளார்.

அதில் மாணவியின் விரலில் லேசாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாணவி அழுது கொண்டே வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் அன்று மாலை, ஆசிரியர் மகேஷ்வரன், மாலை நேர வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த போது, அந்த மாணவியின் தந்தை, அங்கு வந்து, ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் 3 முறை அடித்துள்ளார். இதனால் அந்த ஆசிரியர் நிலை குலைந்து போயுள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிசுப்ராயனிடம் கேட்டபோது 'அந்த பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகியோர் வாய் மொழியாகவே என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் எழுத்துப் பூர்வமாக என்னிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மாணவிக்கு என்ன பாதிப்பு

திருப்பத்துார் அரசு தலைமை மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, 'மாணவியின் விரலில் லேசாக வீக்கம் காணப்பட்டது. பிளாஸ்திரி போட்டால் சரியாகி விடும் எனக்கூறி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.