18.11.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 8, 2023

18.11.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு



18.11.2023 Local Holiday - District Collector Order நவம்பர் 18 உள்ளூர் விடுமுறை

சூரசம்ஹாரத்தை ஒட்டி நவம்பர் 18ம்தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவ.,18ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.,18ம் தேதி நடைபெறவுள்ளதால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 18:11.2023 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 18.11.2023 அன்று அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ ? மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. செலாவணி முறிச் சட்டத்தின்படி ( Under Negotiable Instruments Act, 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

2) இந்நேர்வில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழச்சி 18.11.2023 விடுமுறை நாளான சனிக்கிழமையில் வருவதாலும் மேற்படி தினத்தை அரசு அறிவிப்பின்படி தீபாவளிக்கு மறுநாளான 13:11.2023 அன்று அரசு விடுமுறையாக அளிக்கப்பட்டு மாற்றுப்பணிநாளாக 18.11.2023 அன்று வேலை நாளாக அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு 18.11.2023 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனவே, 18.11.2023 அன்று விடுமுறைக்கு பதிலாக 09.12.2023 இரண்டாவது சனிக்கிழமை மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.