கள்ளக்குறிச்சி அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 30 أكتوبر 2023

கள்ளக்குறிச்சி அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை



*கள்ளக்குறிச்சி அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .*

கள்ளக்குறிச்சி அருகே உள்ள எரவார் கிராமத்தைச் சேர்ந்த ரவி கவிதா தம்பதியரின் மகள் பைரவி( வயது 17).

இவர் அருகிலுள்ள சிறுவத்தூர் கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து 485 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியாகி இருந்தார். இதன் பிறகு மாணவியை பெற்றோர் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில், மாணவியின் தாயார் கவிதா குடும்ப பிரச்சினை காரணமாக தனது மகளை தொட்டியம் கிராமத்தில் உள்ள தனது தம்பி வீட்டில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி பைரவி பூச்சி மருந்தை உட்கொண்டார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உடனடியாக சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.