தமிழக அரசின் ஆசிரியர், அரசு ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஆசிரியர் சங்கம் அறிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 4 أكتوبر 2023

தமிழக அரசின் ஆசிரியர், அரசு ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஆசிரியர் சங்கம் அறிக்கை!

தமிழக அரசின் ஆசிரியர், அரசு ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஆசிரியர் சங்கம் அறிக்கை!

பத்திரிக்கை செய்தி


தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு தமிழக அரசைக் கண்டிக்கிறது

28.09.2023 முதல் ஏழு நாட்களாக சென்னை DPI வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அரசு அளித்து உள்ள பதில் என்பது ஆசிரியர்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. ஆசிரியர்கள் புதிதாக ஊதிய உயர்வு கேட்கவில்லை. அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியைத் தான் நிறைவேற்றக் கேட்கிறார்கள்.

மேலும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அனைவரின் கோரிக்கையும் ஏற்க மறுக்கும் தமிழக அரசை தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வன்மையாக கண்டிக்கிறது. அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியர்கள், டெட் ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என அனைவரின் கோரிக்கையையும் விரைவில் தமிழக அரசு நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.