நாளை 11.10.2023 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் - முதல் பரிசு ரூ.5000/ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 6 أكتوبر 2023

நாளை 11.10.2023 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் - முதல் பரிசு ரூ.5000/

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி 11.10.2023 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் - முதல் பரிசு ரூ.5000/

இவ்வறிவிப்பிற்கிணங்க, தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் 11.10.2023 அன்று பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பெறவுள்ளன. தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்:

பள்ளி மாணவர்களுக்கு 1. வெண்தாடி வேந்தர், 2. வைக்கம் வீரர், 3. பகுத்தறிவு பகலவன், 4. பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தங்கள். கல்லூரி மாணவர்களுக்கு 1. பெரியாரும் பெண் விடுதலையும், 2. சுயமரியாதை இயக்கம், 3. தெற்காசியாவின் சாக்ரடீஸ், 4. தன்மானப் பேரொளி, 5. தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் ஆகிய தலைப்புகளில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன.

இதையும் படிக்க | கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி 09-10-2023 திங்கள் அன்று கட்டுரை போட்டிகள் நடத்துதல் தொடர்பாக CEO செயல்முறைகள் - முதல் பரிசு ரூ.5000/

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.