"ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் 10.10.2023 - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல் - அறிவுரைகள் - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 9 أكتوبر 2023

"ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் 10.10.2023 - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல் - அறிவுரைகள் - Director Proceedings

"ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல் - அறிவுரைகள் - Director Proceedings

சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நகண்.050188/ பகஇ(நேமுஉ}/2023, நாள்.05.10.2023

பொருள் பள்ளிக் கல்வி - அறிவியல் மன்ற செயல்பாடுகள் - " ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" தமிழ்நாடு விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள் - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் -சார்பு

2023-24ம் கல்வியாண்டின் அறிவியல் மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் * ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்" - விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழாவினை அனைத்து பள்ளி மாணவர்களும் கண்டு களித்திடும் வகையில் திரையிட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்நிகழ்வில் உள்ளூர் அறிவியல் அறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வுகள் மற்றும் விண்வெளி சாதனைகளில் தமிழர்களின் பங்கு குறித்து உரைநிகழ்த்திடவும், மாணவர்களிடம் இந்நிகழ்வு குறித்து அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அக்டோபர் மாதத்திற்கான அறிவியல் மன்ற செயல்பாடுகளை " சந்திராயன் -3 திட்டமும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) சாதனைகளும்" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்டு நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு / அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் எதிர்வரும் 09.10.2023 அன்று தொடங்கப்படவுள்ள நிலையில். 10.10.2023 அன்று அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் இந்நிகழ்வினை திட்டமிட்டு திரையிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேவைப்படும் பள்ளிகளில் LCD Projector / Smart TV ஆகியவற்றை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் வாடகைக்குப் பெற்று பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் " ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்* நிகழ்வு திரையிடப்பட்டதை ஆவணப்படுத்தி, நிகழ்வு தொடர்பான அறிக்கையினை 10.10.2023 மாலை 05.00 மணிக்குள் deskinaggmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.