SEAS தேர்விற்கு ஆசிரியர்கள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 31, 2023

SEAS தேர்விற்கு ஆசிரியர்கள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள்



SEAS தேர்விற்கு ஆசிரியர்கள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் Preparation for SEAS Exam by Teachers

தருமபுரி மாவட்டம்- ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வி- மாநிலஅளவிலானஅடைவுத் திறன் தேர்வு 3 , 6 மற்றும் 9 ஆம் வகுப்புமாணவர்களுக்கு 03.11.2023 அன்று நடைபெறுதல்- பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பு : ஆசிரியர்கள் அடைவுத் திறன் தேர்விற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்தல்- சார்பு CEO

செயல்முறைகள்.

பொருள். தருமபுரி மாவட்டம்- ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வி- மாநிலஅளவிலானஅடைவுத் திறன் தேர்வு3, 6 மற்றும் 9 ஆம் வகுப்புமாணவர்களுக்கு 03.11.2023 அன்று நடைபெறுதல்- பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்புஆசிரியர்கள்அடைவுத் திறன் தேர்விற்கு தேவையானமுன்னேற்பாடுகள்செய்தல்- சார்பு.

பார்வை:

மாநிலத் திட்டஇயக்குநர், ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வி, சென்னை- 06, அவர்களின் செயல்முறைகள்கடிதம் ந.க.எண்.3084/ A4/ SEAS / assessment | 2023, Dated.03.10.2023

மேற்காணும் பார்வைகடித்தத்தின் படி, தருமபுரி மாவட்டத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டில்அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்மற்றும் தனியார் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாநிலஅளவிலானஅடைவுத் திறன் தேர்வு ( SEAS - State Educational Achievement Survey) நவம்பர் 3 ஆம் தேதிநடைபெறுகிறது. இத்தேர்விற்கு தேவையானஅனைத்து முன்னேற்பாடுகளையும் சரியாகசெய்து முடிக்க வேண்டும் அனைத்து வகை பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்விற்குசெய்யவேண்டிய முன்னேற்பாடுகள்.

1. அடைவுத் திறன் தேர்வுநடைபெறும் நாளன்று 3, 6 மற்றும் 9 ஆம் வகுப்புபயிலும் மாணவர்கள்அனைவரும் விடுப்புஎடுக்காமல் பள்ளிக்குவருகை புரியவைத்தல் வேண்டும்.

2. தேர்வு நடைபெறும் வகுப்பிற்குரிய பாடஆசிரியர்கள்அனைவரும் தேர்வுநாளன்று பள்ளிக்கு வருகைபுரியவேண்டும்.

3. மாணவர்கள்தேர்வு எழுதுவதற்கு நன்கு காற்றோட்டமுள்ளஅறையினைதேர்வுசெய்து, தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். 4. தேர்வு நடைபெறும் வகுப்பறையில் எண்கள், எழுத்துக்கள், வரைபடங்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை இல்லாமல் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

5. நவம்பர் 2 ஆம் தேதி அன்று களப்பணியாளர்களிடமிருந்து வினாத்தாட்கள் மற்றும் OMR sheet ஆகியவை பெற்று அலமாரியில் பாதுகாப்புடன் வைத்திருத்தல் வேண்டும்.

வினாத்தாட்கள் எக்காரணத்தைக் கொண்டும் பிரிக்காமல் மந்தண முறையில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

6. மாணவர்கள்Blue or Black Ball point பேனாவினைபயன்படுத்தி தேர்வு எழுதவேண்டும்

7. தேர்வுநடத்தும் கள ஆய்வாளர்களுக்கு ( Field Investigators) தேவையான ஒத்துழைப்பு வழங்கி, இத்தேர்வினை எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமால் சிறப்பாக நடத்திட வேண்டும்.

8, அனைத்து OMR களையும் சரி பார்த்து Green cloth Cover இல் வைத்து சீல் செய்ய வேண்டும்.

வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் - ( மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி விரிவுரையாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்களின் ) பொறுப்புகளும் கடைமைகளும் > தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள களப் பணியாளர்களை கொண்டு What"s app Group - ஆரம்பித்தல் வேண்டும்.

நவம்பர் 2 ஆம் தேதி காலை 10 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து களப் பணியாளர்களுக்கும் தேர்வுக்குரிய வினாத்தாள்கள், OMR sheets, ஆகியவை வழங்கி தேர்வு நடைபெறும் பள்ளிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

நவம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிக்கான களப்பணியாளர்களின் வருகைப் பதிவேடு வட்டார அளவில் பராமரிக்க வேண்டும்..

> நவம்பர் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் களப்பணியாளர்களிடமிருந்து OMR -sheets, பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தாத கேள்வித் தாள்கள், ஆகியவை அனைத்தும் எதுவும் விடுபடாமல் சேகரித்தல் வேண்டும்.

தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து களப்பணியாளர்களிடமிருந்து OMR பெறும் போது சரியான முறையில் Shade செய்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

Brown used & unused brown coverகளை தனித்தனியாக சீல் அல்லது Staple செய்த பிறகு Green cloth Cover, brown used and used coverகளை ஒன்றாக pack செய்து மாவட்ட திட்ட அலுவலகத்தில் 03.11.23 இரவு 7.00 மணிக்குள் வட்டார பொறுப்பாளர்கள் சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.