இன்று அக்.27ம் தேதி இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 26 أكتوبر 2023

இன்று அக்.27ம் தேதி இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!



சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழாவை யொட்டி 27.10.2023 வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.*

செ.கார்மேகம்,இ.ஆ.ப.,

மாவட்ட ஆட்சியர், சேலம்

வரும் 27ம் தேதி 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை Holidays for schools and colleges in 7 Unions on 27th

மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு வரும் 27ம் தேதி சிவகங்கையில் உள்ள 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு!

தமிழகத்தில் அக்.27 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு அக்.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மருது சகோதரர்கள் 222வது நினைவுதினம் அக்.27 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்புத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக். 27 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ளார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.