CPS ஒழிப்பு இயக்கம் (CPS Abolition Movement) போராட்ட ஆயத்த மாநாடு - 28.10.2023 சனிக்கிழமை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 26 أكتوبر 2023

CPS ஒழிப்பு இயக்கம் (CPS Abolition Movement) போராட்ட ஆயத்த மாநாடு - 28.10.2023 சனிக்கிழமை

தொடர் போராட்டங்களை அறிவித்திட போராட்ட ஆயத்த மாநாடு - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் : 309 - ன் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ... CPS திட்ட ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கக் கோரியும் ... தொடர் போராட்டங்களை அறிவித்திட ,போராட்ட ஆயத்த மாநாடு போராட்ட அறிவிப்பு.

புனித மரியன்னை பேராலய மண்டபம் , மேலப்புதூர் , திருச்சி -1 .

போராட்ட ஆயத்த மாநாடு



CPS ஒழிப்பு இயக்கம்

(CPS Abolition Movement) போராட்ட ஆயத்த மாநாடு


28.10.2023 சனிக்கிழமை

இடம் :

புனித மரியன்னை பேராலய மண்டபம், மேலப்புதூர், திருச்சி-1.

CPS ஒழிப்பு இயக்கம், மாநில மையம். • புதிய ஓய்வூதிய திட்டத்தை (CPS) மேற்கு வங்காள அரசு இன்று வரை அமுல்படுத்தவில்லை.

• CPS திட்டம் அமுல்படுத்தப்பட்ட இராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் CPS திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

• திமுகவின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண்: 309 - ன் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரியும்...

• CPS திட்டத்தில் இறந்த / ஓய்வு பெற்ற / ஓய்வு பெறும் அரசு ஊழியர் / ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்கக்கோரி...

| CPSஐ ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காக துவங்கப்பட்ட இயக்கம். CPS ரத்து செய்யப்பட்டால் இவ்வியக்கம் கலைக்கப்படும். இந்த இயக்கம் எந்த சங்கத்துடனும் இணைக்கப்பட்ட இயக்கம் அல்ல. CPSல் பணியுரியும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் இயக்கம் இது.

இராஜஸ்தான், ஜார்கண்ட் மாநில அரசுகள் போன்று CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி நடைபெறும் போராட்ட ஆயத்த மாநாட்டிற்கு அணி திரண்டு வாரீர்!

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.