SMC SUBCOMMITTEE GUIDELINES - பள்ளி மேலாண்மை குழுவில் துணைக் குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 31, 2023

SMC SUBCOMMITTEE GUIDELINES - பள்ளி மேலாண்மை குழுவில் துணைக் குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகள்



பள்ளி மேலாண்மை குழுவில் துணைக் குழுக்களை அமைப்பதற்கான வழிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை, தஞ்சாவூர் நிலை - 01

• பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் 06-10-2023 & 13-10-2023 அன்று எடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு கூட்டம் முடிவுகளின் படி TNSED PARENT App-ல் SMC தலைவர் அல்லது பள்ளி தலைமையாசிரியர் Login வழியாக துணைக் குழு Module-ல் தவறாமல் ஐந்து பொறுப்பாளர் பெயர்களை தேர்வு செய்து Save செய்ய வேண்டும். நிலை - 02

நியமனம் செய்யப்பட்ட ஐந்து பொறுப்பாளர்களும் (SMC உறுப்பினர்கள்) தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தெரிந்து கொண்டு Android LDL6560 Play Store-60 TNSED PARENT App- download Install செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பொறுப்பாளர்களும் தனித்தனியே பதிவிறக்கம் செய்யப்பட்ட TNSED PARENT App-ல் Login செய்ய வேண்டும். அதற்க்கு Username என்ற களத்தில் ஏற்கனவே School login-ல் SMC Reconstitution Module-இல் பதிவு செய்யப்பட்ட தங்களுடைய 10 இலக்க Mobile Number-யை உள்ளீடு செய்யவும். Password என்ற களத்தில் Smc@கடைசி நான்கு இலக்க மொபைல் எண் பயன்படுத்தி உள்ளீடு செய்யவும். (எ.கா.: மொபைல் எண் 9876512345 எனில் Username: 9876512345 ஆகும் மற்றும் Password: Smc@2345 ஆகும்) • Login செய்தவுடன் தோன்றும் களங்களில் துணைக்குழுக்கள் என்ற தலைப்பை தேர்வு செய்ய குழுவின் பொறுப்பாளர் பெயர் தோன்றும்.

அதில் துணைக் குழு உறுப்பினர் என்ற களத்தில் தங்களுக்கு தெரிந்த இரண்டு முதல் ஐந்து பெற்றோர் பெயர்களை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் மாணவரின் EMIS ID அல்லது Aadhar number அல்லது Mobile number உள்ளீடு செய்து Search கொடுக்கவும், அதில் சரியான மாணவரின் பெற்றோர் (தாய் மற்றும் தந்தை) பெயரில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து சேமிக்கவும்.

இதேபோல் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் (5) தங்களுடைய மொபைல் எண்ணையை பயன்படுத்தி SMC துணைக் குழுக்கள் ஏற்படுத்தவேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.