அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் 2023-24 நடத்துதல், வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 7, 2023

அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் 2023-24 நடத்துதல், வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து - CEO Proceedings

Conduct of Art Festival Competitions in Government Schools 2023-24, Subject to Issue of Guidelines - CEO Proceedings - அரசு பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் 2023-24 நடத்துதல், வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து - CEO Proceedings

தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்டதிட்டஒருங்கிணைப்பாளர் / முதன்மைக்கல்விஅலுவலர் அவர்களின் செயல்முறைகள்

பிறப்பிப்பவர்: திருமதி. எல். ரெஜினி, M.A., M.Ed., M.Phil.,

தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கல்வி சாரா செயல்பாடுகள் - அரசு பள்ளிகளில் ''கலைத் திருவிழா போட்டிகள் 2023-24*நடத்துதல், வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து

பார்வையில் காணும் செயல்முறைகளின் படி மாணவர்கள் கலைத்திறனை வெளிக்கொணரும் விதமாக அரகப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி. வட்டாரம். மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படஉள்ளது.

இதனைத் தொடர்ந்து 2022-23 ஆம்ஆண்டில் 6-12 வகுப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, இப்போட்டிகளில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசுகளும் கலையரசன், கலையரசி விருதுகளும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. கலைச் செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரக்கூடிய சூழலை உருவாக்குவதோடு பிறகற்றல் செயல்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது மேலும் அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக்கொள்வதால் அவர்களை சுற்றி உள்ள உலகத்தைப்பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. இதனை முன்னிறுத்தி இவ்வாண்டும் 6 முதல் 12 வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் அனைத்து அரசு நடுநிலைஉயர்நிலைமற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பாடுகள் வதி வளக்கும் எனவே இவ்வாண்டு 2023-24 இல் கலைக்கிராவிமா அ.கலைத்திருவிழா போட்டிகள்-2023-24 அனைத்து அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பின்வரும் அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படவேண்டும்.

போட்டிகள் மற்றும் பிரிவுகள் (Category)

கலைத்திருவிழா போட்டிகள் பின்வருமாறு மூன்று பிரிவுகளில் நடத்தப்பட வேண்டும்.

பிரிவு1- 6 முதல்8 ஆம் வகுப்புவரை பிரிவு 2- 9 மற்றும் 10ஆம் வகுப்பு

பிரிவு 3- 11 மற்றும் 12 ஆம்வகுப்பு

இம் மூன்று பிரிவில் நடைபெறும் போட்டிகள் பள்ளி அளவில் தொடங்கி, அடுத்தடுத்த நிலைகளான வட்டாரம், மாட்டம். மற்றும் மாநில அளவில் நடைபெறும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் வட்டார அளவிலும் வட்டார அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அமாவில் நடைபெறும் போட்டிகளில் ' பங்கேற்பர்.

மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும் கலைத்திருவிழா: தனிப்போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ/மாணவிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவருக்கு கலையரசன் விருதும் மாணவிக்கு கலையரசி விருதும் வழங்கப்படும். இவ்விருதுகள் மூன்று பிரிவுகளிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்க்ள் ஊக்கப்படுத்தப்படும்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெரும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்மி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். பள்ளியின் EMIS வாயிலாக ஒவ்லொரு போட்டியில் பங்கு பெறும் மாணவரின்விவரங்களை போட்டி வாரியாக பள்ளி அமரவில் பதிவு செய்தல் வேண்டும்.

போட்டிகள் முடிந்த பின்னர் தேர்வான / வெற்றி பெற்றமாணவ, மாணவியரின்பெயரை "EMIS ல் பதிவு செய்தல் வேண்டும். இந்த மாணவரின் பெயர் அடுத்த நிலை போட்டிக்கு பாணவ மாணவியரின் பெயரை இவ்வாறு அந்த நிலையில் உள்ள பொறுப்பு அனுயலரா EMIS-ல் உள்ளீடு செய்யப்பட வேண்டும்.

மேற்காணும் கனலத திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர்; பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்ககல்வியை இயக்குநர் ஆகியோரின் செயல்முறைகள் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை அரசுப் புள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய' வேண்டுமாய் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆய்வு அலுவர்ைகள் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இணைப்பு: 1. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர். பள்ளிக் கல்வி இயக்குநர். மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோரின் செயல்முறைகள்,

2. கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.