SPD - KT Fund Approved Proceedings - கலைத் திருவிழா 2023-24 | நடுவராகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் - மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவுப்படி - நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 20, 2023

SPD - KT Fund Approved Proceedings - கலைத் திருவிழா 2023-24 | நடுவராகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் - மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவுப்படி - நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!



SPD - KT Fund Approved Proceedings - Art Festival 2023-24 | Remuneration for teachers serving as arbitrator - transport and food for students - state planning director orders by allocating funds!

கலைத் திருவிழா 2023-24 - நடுவராகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் - மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவுப்படி - நிதி ஒதுக்கீடு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கல்வி சாரா செயல்பாடுகள் அரசு பள்ளிகளில் "கலைத் திருவிழா போட்டிகள் 2023-24- வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு நிதி விடுவித்தல் – சார்ந்து

அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பார்வையில் காணும் கடிதம் வாயிலாக இவ்வாண்டு அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்திட போட்டிகள் நடத்துதல் சார்ந்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

அ. கடந்த ஆண்டு வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகள் நடத்திட ரூ.30,000/- மும், மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளுக்கு செலவினம் மேற்கொள்ள ரூ.1.00,000/-மும் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளுக்கு ஒரு வட்டாரத்திற்கு ரூ.67500/- என்கின்ற விகிதாசார அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு அதுபோல இவ்வாண்டும் கலைத்திருவிழா செய்யப்பட்டுள்ளது. போட்டிகளுக்கு வட்டாரம் மற்றும் மாவட்ட ம்அளவில் நடைப்பெற உள்ள போட்டிகளுக்கு பின்வருமாறு மாவட்ட வாரியாக LEP- Secondary தலைப்பின் கீழ் நிதி விடுவிக்கப்படுகிறது. (ரூபாய் நான்கு கோடியே நாற்பத்தோரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் மட்டும்) COLD OLD, விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் மேற்கொள்ளப்படவேண்டிய செலவினங்கள் சார்ந்து வழிகாட்டுதல்கள் பின்வருமாறு வழங்கப்படுகிறது.

(1) வட்டார அளவிலான போட்டிகள்:

வட்டார அளவில் ஒருவட்டாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.30,000/- நிதியினை போட்டிகள் நடத்துதல் மற்றும் நடுவர்கள் மதிப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட செலவினங்கள் மேற்கொள்ள பயன்படுத்திடலாம்.

(II) மாவட்ட அளவிலான போட்டிகள்:

மாவட்டங்களுக்கு விழா செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.1,00,000/- நிதியினை விழா மேடை அமைத்தல், அலங்காரஅரங்குகள், ஒலி-ஒளி அமைப்பு, விளம்பரங்கள், முக்கிய விருந்தினர்கள் உபசரிப்பு, போக்குவரத்து, தேநீர், சிற்றுண்டி, உணவு. தொகுப்பு அறிக்கை தயாரித்தல் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட செலவினங்கள் மேற்கொள்ளலாம்.

மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு ஒரு வட்டாரத்திற்கு ரூ.67500/- வட்டார விகிதாசார அடிப்படையில் போட்டிகள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளில் இருந்து போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள், போட்டியில் பங்கேற்கும் மாணவர் ஒருவருக்கு தலா ரூ.100/- வீதம் போக்குவரத்து பயணப்படி வழங்கவும், மாணவர் ஒருவருக்கு தலா ரூ.100/- அளவில் தேநீர், சிற்றுண்டி, உணவு உள்ளிட்ட இதர செலவினங்கள் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நடுவர்கள் மதிப்பூதியம் (ஒரு வகை போட்டிக்கு நடுவர் ஒருவருக்கு) ரூ.500/- வீதம் வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.

(iii) குழு அமைத்து செலவினங்கள் மேற்கொள்ளல்

மேற்குறிப்பிட்டுள்ள மாவட்ட, வட்டார அளவிலான செலவினங்கள் அனைத்தையும் குழு அமைத்து மேற்கொள்ளுமாறும், தணிக்கைக்கு தேவைப்படும் செலவின இரசீதுகளை முறையாக பராமரித்து விழா முடிந்தவுடன் பயனீட்டு சான்றிதழ்களை செலவின செலவின அறிக்கையுடன் இணைத்து அனுப்பி வைத்தல் வேண்டும்.

அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கலைத் திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டுமாய் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தவும், அதனை ஆய்வு அலுவலர்கள் உறுதிப்படுத்தவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD SPD - KT Fund Approved Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.