Learning Outcome Exam - Direct Link - அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறனறி தேர்வு நாளை தொடங்குகிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 16, 2023

Learning Outcome Exam - Direct Link - அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறனறி தேர்வு நாளை தொடங்குகிறது



அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறனறி தேர்வு நாளை தொடங்குகிறது Aptitude test for students studying in government schools starts tomorrow

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நாளை (அக்.17) தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் நோக்கத்தில் மாநில மதிப்பீட்டுப் புலம் பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நாளை (அக்டோபர் 17) முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு, திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் https://exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அந்த வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Learning Outcome Exam - Direct Link

6-ஆம் வகுப்பு வினாத்தாள்

16-10-2023 மதியம் 2 மணி முதல் டவுன்லோட் செய்யலாம்.

அதற்கான நேரடி லிங்க்

http://exam.tnschools.gov.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.