அரசுப்பள்ளிகளில், அடிப்படை பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டி, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு கடிதம்
அரசுப் பள்ளிகளில் கூட்டுபவர்- பகல்-இரவு நேரக் காவலர் - துப்புரவுப் பணியாளர்-நியமனம் செய்யக் கோருதல் - சார்பு.
வணக்கம். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில், தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை, மாணவர் நலன் சார்ந்து நிறைவேற்றி வருகிறது. இதற்கு எங்களது சங்கத்தின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளி மாணவர்கள் நலனில், பள்ளி வளாக சுகாதாரம் மிகவும் இன்றியமையாதது. அடிப்படைப் பணியாளர்களை நியமித்தல் என்பது பள்ளியின் சுகாதாரத்தைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பல வருடங்களாக அப்பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. இதன் காரணமாக பள்ளிகளில் சுகாதாரத்தைப் பேணுவது சவால் நிறைந்ததாக உள்ளது. எனவே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் குறிப்பாக, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் நலன் கருதி மேற்காண் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்பிடுமாறும், பணியிடங்கள் இல்லாத பள்ளிகளில் புதிய பணியிடங்களை ஏற்படுத்தி நியமனம் செய்யவேண்டும் எனவும் தேசிய ஆசிரியர் சங்கம் தங்களை கேட்டுக் கொள்கிறது. மேலும் பெண்கள் பள்ளிகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.