TTS Exam 2023 - Offline Payment Instructions by DGE - PDF - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு - தேர்வுக் கட்டணம் செலுத்து சீட்டு E-Challan -ல் செலுத்தக் கோருதல் - தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 25, 2023

TTS Exam 2023 - Offline Payment Instructions by DGE - PDF - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு - தேர்வுக் கட்டணம் செலுத்து சீட்டு E-Challan -ல் செலுத்தக் கோருதல் - தொடர்பாக



TTS Exam 2023 - Offline Payment Instructions by DGE

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு. அக்டோபர் 2023 - தேர்வுக் கட்டணம் செலுத்து சீட்டு E-Challan -ல் செலுத்தக் கோருதல் -தொடர்பாக.

பார்வை:

1. இதே எண்ணிட்ட இவ்வலுவலக செய்திக்குறிப்பு நாள்.04.09.2023.

2. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள்.07.09.2023

15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பித்த பள்ளிகளிலிருந்து தேர்வெழுதும் தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் (Summary Report) மற்றும் கட்டண செலுத்துச் சீட்டினை 11.09.2023 முதல் 25.09.2023 வரை அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் பார்வை 2-ல் காணும் கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உதவி இயக்குநர்கள் தேர்வர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலில் (Summary Report)"Not Paid" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பள்ளிகள் இணைப்பில் உள்ள வழிமுறையினை பின்பற்றி தேர்வு கட்டணத்தை ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம். www.karuvoolam.tn.gov.in இணையதளத்தில் 0202 01 102 AA 22713 என்ற கணக்குத் தலைப்பில் செலுத்த அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் சம்மந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து தேர்வுக் கட்டண விவரம் (PAYMENT RECIEPT) பெறப்பட்டவுடன் இணைப்பில் தெரிவித்துள்ள நடைமுறையினை பின்பற்றி தேர்வர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தியதை 29.09.2023-க்குள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. dge portal-ல் பதிவு செய்யுமாறு

மேலும், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாது என்பதால் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி பள்ளிகளிடமிருந்து தேர்வுக் கட்டண பற்றுச்சீட்டு (e-chellan) பெற்றவுடன் அதனை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD TTS Exam 2023 - Offline Payment Instructions by DGE PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.