முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - TNCMTSE 2023 - NR & Hall Ticket downloading instructions by DGE - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 26, 2023

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு - TNCMTSE 2023 - NR & Hall Ticket downloading instructions by DGE



TNCMTSE 2023 - NR & Hall Ticket downloading instructions by DGE!

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களின் "பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத்தாட்கள்" (Nomminal Roll -Cum - Attendance Sheet) தேர்வு மைய வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு மையமாகச் செயல்படும் பள்ளியின் User Id / Password -ஐ பயன்படுத்தி 27.09.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, தங்கள் எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் பெயர் பட்டியலினை தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் இரு தேர்வுகளுக்கும் ஒரே பெயர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 27.09.2023 பிற்பகல் முதல் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது பள்ளிகளுக்குரிய User Id / Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களுக்கு பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளையும், தேர்வு மைய விவரத்தினையும் சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவித்திட உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளில் மாணவரின் பெயர் / பிறந்ததேதி, இனம் ஆகியவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், சிவப்பு நிற மையினால் பிழையினை சுழித்து சரியான திருத்தப் பதிவினை மேற்கொள்ள வேண்டும். புகைப்படத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் தேர்வரின் புதிய புகைப் படத்தை உரிய இடத்தில் ஒட்டி சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டு (பள்ளி முத்திரையுடன்) தேர்வர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், ஒரு புகைப்படத்தை சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தகைய தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.