பள்ளிக்கல்வித்துறையே உன் பெயர்தான் குழப்பமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 17 أغسطس 2023

பள்ளிக்கல்வித்துறையே உன் பெயர்தான் குழப்பமா?

பள்ளிக்கல்வித்துறையே உன் பெயர்தான் குழப்பமா?

இன்று தொடக்கக் கல்வித் துறையிலிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுவதற்கான அலகு விட்டு அலகு மாறுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை 176.நாள் 17.12.2021 இன் படி முன்னுரிமை பெற்ற ஒன்றியங்களுக்கு மட்டுமே (Priority blocks)அலகு விட்டு அலகுமாறுதல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் ஒவ்வொரு மாவட்ட வாரியாக மாவட்டத்திற்குள் முதலில் அலகு விட்டு அலகு மாறுதல் நடத்தப்படும் என்று காலிப்பணியிடங்கள் மாநிலம் முழுவதும் காண்பிக்கப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறை திடீரென தற்போது முன்னுரிமை ஒன்றியங்களுக்குமட்டுமே அலகு விட்டு அலகு மாறுதல் நடைபெறும் என்று பல்டி அடித்து இருக்கிறது.

ஆசிரியர்களை தேவையில்லாமல் காத்திருக்க செய்து, முன்னுரிமை பட்டியல் வெளியிட்டு இதுபோன்ற குழப்பத்தில் ஈடுபடும் நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை எப்போது நிறுத்தும்?

மாநில மையம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.