1.16 லட்சம் இடங்களில் இன்று குடற்புழு நீக்க முகாம் - (National Deworming Day (17-08-2023) Camp - August 2023 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 17 أغسطس 2023

1.16 லட்சம் இடங்களில் இன்று குடற்புழு நீக்க முகாம் - (National Deworming Day (17-08-2023) Camp - August 2023 - PDF



1.16 லட்சம் இடங்களில் இன்று குடற்புழு நீக்க முகாம்

தமிழகம் முழுவ தும் 1.16 லட்சம் இடங்களில் குடற் புழு நீக்க சிறப்பு முகாம் வியாழக்கிழமை (ஆக.17)நடைபெறுகிறது.

அதன் வாயிலாக 2 வயதுக்குள் பட்ட குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வளரிளம் பருவத்தினர், 30 வயது வரையுள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கடைப்பிடிக் கப்படுகிறது. இந்த இரு மாதங்களி லும் நாடு முழுவதிலும் 19 வயதுக் குள்பட்ட சிறார் மற்றும் 30 வயதுக் குள்பட்ட வளரிளம் பெண்களுக்கு ‘அல்பெண்டசோல்' எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங் கப்படுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டில் அங் கன்வாடி மையங்கள், அரசுப் பள் ளிகள், அரசுசார் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள் என மொத்தம் 1.16 லட்சம் இடங்க ளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப் பட்டு மாத்திரைகளை விநியோகிக் கப்பட உள்ளது. இதற்கான பணிக ளில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப் படஉள்ளனர்.


சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கடிதம்

அங்கன்வாடி பணியாளர்களுக்கான சுகாதாரக் கல்வி தகவல்கள்

களப்பணியாளர்களின் கேள்வி பதில்


CLICK HERE TO DOWNLOAD ALL DETAILS PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.