திருத்திய சுற்றறிக்கை - 'சங்கங்கள் போராட உரிய அனுமதி பெற வேண்டும்' என்ற அறிவிப்பை, 'போராடும் போது தகவல் தெரிவிக்க வேண்டும் என மாற்றிய DEO - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 1 سبتمبر 2023

திருத்திய சுற்றறிக்கை - 'சங்கங்கள் போராட உரிய அனுமதி பெற வேண்டும்' என்ற அறிவிப்பை, 'போராடும் போது தகவல் தெரிவிக்க வேண்டும் என மாற்றிய DEO

TNPTFன் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, 'சங்கங்கள் போராட உரிய அனுமதி பெற வேண்டும்' என்ற அறிவிப்பை, 'போராடும் போது தகவல் தெரிவிக்க வேண்டும் என மாற்றிய DEO



மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி),

விருதுநகர்.

நாள்:01.09.2023

திருத்திய சுற்றறிக்கை

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கல்வி மாவட்டத்தில்(தொடக்கக் கல்வி) உள்ள அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள் தங்கள் கோரிக்கை சார்பான போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது இவ்வலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க( இவ்வலுவலகத்திலிருந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு) அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் - DEO சுற்றறிக்கை!

சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் - DEO!


இச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறும்வரை இதனைக் கண்டித்து தொடர் போராட்டம் நடைபெறும் - TNPTF

-- -- -- --

*வன்மையாகக் கண்டிக்கின்றோம்....*

*ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விதமாகப் போராடுவதற்கு அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்த விருதுநகர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களை TNPTF விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்*

*ஜனநாயக நாட்டில் எவ்வித அனுமதியுமில்லாமல் கோரிக்கைகள் நிறைவேற ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களையே எதிர்த்துப் போராடும் காலத்தில்....*

*போராட அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணையிடும் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல் வெட்கக்கேடு....* *உடனே வாபஸ் வாங்கு!*

*வாபஸ் வாங்கும்வரை தொடர் போராட்டம்*

*முதல் கட்டமாக...*

*கண்டன ஆர்ப்பாட்டம்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*நாள் : 04.09.2023 திங்கள் மாலை 5 மணி*
*இடம்: மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி)*
*சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகம்*
*விருதுநகர்*
*TNPTF,விருநகர் மாவட்டம்*

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.