6,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெறும் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு! - செப்., 8ம் தேதி கடைசி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 23 أغسطس 2023

6,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெறும் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு! - செப்., 8ம் தேதி கடைசி

6,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெறும் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு! - செப்., 8ம் தேதி கடைசி

கல்வி உதவித்தொகை பெறும் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அஞ்சல் துறை சார்பில், 'தீன் தயாள் ஸ்பர்ஸ் யோஜனா' எனும் திட்டத்தின் கீழ், உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம், 2017ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

இப்போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் சிறந்த கல்வித்தகுதி கொண்ட, அஞ்சல்தலை சேகரிக்கும் மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். வெற்றி பெற்று விருது பெறுபவர்களுக்கு, 6,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இதற்காக, ஒவ்வொரு அஞ்சல் கோட்டம் சார்பிலும், அஞ்சல் தலை சேகரிப்பு வினாடி - வினா, கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுவோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறலாம்.

இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ - மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அஞ்சல் தலை சேகரிப்பு கிளப்பில், உறுப்பினராக இருக்க வேண்டும்.

மேலும், தேர்வுகளில், 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, 5 சதவீத தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பங்களை, செப்., 8ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தை அணுகலாம். அல்லது, 044 - 28543199 என்ற எண்ணிலும், annaroadho-dop@nic.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.