அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு (Post Graduate Courses) மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 10, 2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு (Post Graduate Courses) மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024

Government Arts and Science Colleges - PG Courses 2023-24 - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு (Post Graduate Courses) மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024

கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை 600 015 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024

முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு (Post Graduate Courses)

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in and www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விண்ணப்பிக்கும் ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் - ரூ. 58/- பதிவுக் கட்டணம் - ரூ2/-

SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை - பதிவுக் கட்டணம் - ரூ. 2/- மட்டும்

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking/UPI poub இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் *The Director, Directorate of Collegiate Education, Chennai - 15" என்ற பெயரில் 14.08.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் - 14.08.2023

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் - 22.08.2023

தொடர்பு எண்கள்:93634 62070, 93634 62042. 93634 62007, 93634 62024

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.