‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்’ - 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ஆக.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 4 أغسطس 2023

‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்’ - 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ஆக.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்



சென்னை ஐஐடி-இல் இணையவழியில் வழங்கப்படும் ‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்’ என்ற 4 ஆண்டு பட்டப் படிப்புக்கு ஆக.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளா்ச்சிக்கு வலுசோ்க்கவும், உள்நாட்டு தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும் ‘பி.எஸ். எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்’ எனும் 4 ஆண்டு படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான பாடத் திட்டம் சா்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பில் சேருவதற்கு ஜேஇஇ நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை.

அதற்கு மாறாக பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், கணிதப் பாடங்களைப் படித்தவா்களாக இருக்க வேண்டும்.

இந்தப் படிப்பில் சோ்க்கை பெறும் மாணவா்களுக்கு பாடங்கள் முழுவதும் இணையவழியிலேயே பயிற்றுவிக்கப்படும். விருப்பமுள்ளவா்கள்  இணையதளம் வழியாக ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகள் ஆட்டோமோட்டிவ், செமி கண்டக்டா் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். மேலும், பி.எஸ். படிப்பில் சேரும் மாணவா்கள் நன்றாக பயில ஏதுவான வழிகாட்டுதல்கள், குறிப்புகள் வழங்கப்படும்.

எனவே, மாணவா்கள் இந்தப் படிப்பில் சோ்ந்து பயன்பெற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.