B.Arch: பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 20 أغسطس 2023

B.Arch: பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடக்கம்



B.Arch. The counseling for general category will be held from Monday onwards to get a shock in the studies. - பி.ஆா்க். படிப்பில் சோ்க்கை பெற பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை  திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,467 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2,485 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 1,400 போ் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனா். இவா்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தகுதியான மாணவா்களுக்கான சோ்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கியது.

முதல் 2 நாள்கள் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு, விளையாட்டு வீரா் என சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பங்கேற்க 32 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில் 8 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கவுள்ளது.

இதில் விருப்பமான இடங்களை தோ்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து பின்பு இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிமுறைகளின்படி மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தோ்வு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.