ஆடி அமாவாசை... இந்த மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 15 أغسطس 2023

ஆடி அமாவாசை... இந்த மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



ஆடி அமாவாசை... இந்த மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக.16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறித்து பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்துக்கள் பண்டிகையில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆடி அமாவாசை. இந்த நாளில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம். இதனால், ராமேஸ்வரம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் திரளானோர் சாமி தரிசனம் செய்ய செல்வார்கள். பலர் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

அந்த வகையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள அய்யனார் கோயிலில் தங்குவதற்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.