அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - திருவல்லிக்கேணி மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 يوليو 2023

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - திருவல்லிக்கேணி மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை

அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 15.07.2023 (சனிக்கிழமை) முழு வேலை நாள் - திருவல்லிக்கேணி மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை

சென்னை. முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் நக.எண். 1392/ ஆ6 2022 நாள். 14.07.2023ன் படி பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து வகைப் பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாட தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளை கொண்டாடியதை புகைப்பட ஆதாரத்துடன் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அலுவலக கோப்பில் பராமரிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மேற்படி விழாவை கொண்டாடும் விதமாக 15.07.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் என தெரிவிக்கப்படுகிறது. இதனை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.