தமிழ்நாடு நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி; மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 8 يوليو 2023

தமிழ்நாடு நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி; மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி

தமிழ்நாடு நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி; மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு வரும் 12-ம் தேதி கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்த்திக்குறிப்பு :

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பன்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வரும் 12ம் தேதி கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும்.

கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிக்கானத் தலைப்புகள் சி.இ.ஓ.,வின் சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000ம், இரண்டாம் பரிசு ரூ.7,000-ம், மூன்றாம் பரிசு ரூ.5,000-ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


மேலும், மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஜூலை 18 அன்று, தமிழ்நாடு நாள் விழாவில் முதல் பரிசு ரூ50,000-ம், இரண்டாம் பரிசு ரூ 30,000-ம், மூன்றாம் பரிசு ரூ 20,000 வழங்கப்படும்.

மேலும், இப்போட்டிகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் , கலெக்டர் அலுவலக வளாகம், விழுப்புரம். மொபைல் எண் 97869 66833 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.