உள்ளாட்சி மன்ற தலைவர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - செய்தி வெளியீடு எண்:1384 - நாள்:13.07.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 13 يوليو 2023

உள்ளாட்சி மன்ற தலைவர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - செய்தி வெளியீடு எண்:1384 - நாள்:13.07.2023

Chief Minister M.K.Stal's order to give Dhinakaran gratuity to Local Council Chairman, Members - Press Release No:1384 - Date:13.07.2023 - உள்ளாட்சி மன்ற தலைவர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாநகராட்சி மேயர்களுக்கு, மாதந்தோறும், ரூ.30,000, துணை மேயர்களுக்கு ரூ.15,000 மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.

இதே போன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூ.15,000, துணைத் தலைவர்களுக்கு ரூ.10,000 மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 மதிப்பூதியம் வழங்கப்படும்..!

மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு ரூ.10,000 பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூ.5,000 மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

இந்த மதிப்பூதியம், இம்மாதம், அதாவது, 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்; முதல்வர் அறிவிப்பு!

உள்ளாட்சிப் பிரதிநிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த

மதிப்பூதிய விவரம் கீழ்வருமாறு:-

மாநகராட்சி மேயர் -ரூ.30,000

மாநகராட்சி துணை மேயர் - ரூ. 15,000

மாநகராட்சி மன்ற உறுப்பினர் - ரூ. 10,000

நகராட்சி மன்றத் தலைவர் - ரூ.15,000 நகராட்சி மன்ற துணைத் தலைவர் -ரூ.10,000

நகராட்சி மன்ற உறுப்பினர் - ரூ.5,000

செய்தி வெளியீடு எண்:1384

நாள்:13.07.2023


நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்

மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள். நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள், தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என 13.04.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். 2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இக்கோரிக்கையினை பரிசீலித்து, மாநகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர். துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர். பேரூராட்சி மன்றத் தலைவர். துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளை சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.

3.இதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு. மாதந்தோறும், ரூபாய் முப்பதாயிரம், துணை மேயர்களுக்கு ரூபாய் பதினைந்தாயிரம் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். இதே போன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் பதினைந்தாயிரம். துணைத் தலைவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம், பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம், இம்மாதம், ஆதாவது. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.

4. இந்நடவடிக்கை, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத் திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

அரசு முதன்மைச் செயலாளர்

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.