கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள்: மு.க. ஸ்டாலின்
கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியில் இரு கண்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு மற்றொரு அடையாளமாகத் திகழும் வகையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க பாடுபட்டவர்களுக்கு பாராட்டுகள். நூலகம் அமைக்க உழைத்த எ.வ. வேலுவையும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும் பாராட்டுகிறேன். கல்வியும் சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியில் இரு கண்கள் சென்னையில் மருத்துவமனையும் மதுரையில் நூலகமும் கருணாநிதி பெயரில் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை தமிழகத்தின் தலைநகர் என்றால் மதுரை தமிழகத்தின் கலைநகர் சங்கம் வளர்த்த மதுரையில் நூலகம் அமைக்காமல், வேறு எந்தப் பகுதியில் நூலகம் அமைக்க முடியும் கருணாநிதி மேல் உள்ள அன்பின் வெளிப்பாடே இந்த நூலகம் மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்திற்கு அனைவரும் அறிவுத் தேடலோடு வர வேண்டும் நூலகத்தினால் தமிழகத்தில் அறிவுத் தீ பரவப்போகிறது. அறிவுப் பசிக்காக அனைவரும் இங்கு வர வேண்டும்.
கருணாநிதி எழுதிய புத்தகங்களை வைக்கவே புதிதாக ஒரு நூலகம் அமைக்கலாம் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள், சட்டப்பேரவை பேச்சுகள், கடிதங்கள், பாடல்கள் என பலவற்றை எழுதியுள்ளார்.
கருணாநிதி போன்று எழுதினவர்கள், ஆய்வு செய்தவர்கள் என பலர் உண்டு.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.