திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை - நாள்:17-07-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 17, 2023

திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை - நாள்:17-07-2023

திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை - நாள்:17-07-2023

2023-24 ம் கல்வியாண்டிற்கான முதல் இடை பருவத்தேர்வுக்கான வினாத்தாள் தேவை எண்ணிக்கை படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

> படிவத்தில் தேவையான எண்ணிக்கையினை பூர்த்தி செய்து தங்கள் வினாத்தாள் பெற்றுக்கொள்ளும் நோடல் பள்ளி தலைமைஆசிரியரிடம் 18/07/2023 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 12 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமைஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

வினாத்தாள் கட்டுக்காப்பு தலைமைஆசிரியர்கள்,தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளிலிருந்தும் உரிய படிவத்தை பெற்று 18/07/2023 மாலை 5 மணிக்குள் இவ்வலுவலக தேர்வு பிரிவு ஆ-2 ல் தவறாது ஒப்படைக்க வேண்டும்.

9,10,11 மற்றும் 12 ம் வகுப்பிற்கு முதல் இடை பருவத்தேர்விற்கு பாடப்புத்தகத்தின் பொருளடக்கம் பகுதியில் குறிப்பிட்டுள்ள சூன் மற்றும் சூலை மாதத்திற்குரிய பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

> தேர்வு கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.