40,000 மாணவர்களுக்கு கிரெடாய் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 14 يوليو 2023

40,000 மாணவர்களுக்கு கிரெடாய் பயிற்சி

Cretai training for 40,000 students - 40,000 மாணவர்களுக்கு கிரெடாய் பயிற்சி

கட்டுமான துறையில் தொடர்ந்து, 40,000 இன்ஜி., மாணவர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படும் என, கிரெடாய் என்ற இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கட்டுமான துறையில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி, தொழில்முனைவோர் ஆவது குறித்து, கிரெடாய் சார்பில், முதற்கட்டமாக, 25 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அதில், கிரெடாய் நிர்வாகிகள் பேசுகையில், 'கிரெடாய் சார்பில், தொடர்ந்து இன்ஜி., மாணவர்கள் 40,000 பேருக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படும்' என்றார்.

நிகழ்ச்சியில், கிரெடாய் அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன், தொழில் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.